என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆரம்ப சுகாதார நிலையம்"
தேனி அருகே உள்ள கோடாங்கிபட்டி தென்றல் நகரை சேர்ந்த தனுஷ்கோடி மகன் கண்ணன் (வயது 29). என்ஜினீயர். இவருடைய மனைவி மகாலட்சுமி (25). இவர் எம்.பி.ஏ. பட்டதாரி. இவர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மகாலட்சுமிக்கு கடந்த 2-ந்தேதி வீட்டிலேயே சுகப்பிரசவம் ஆனது. அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
அவருடைய கணவரே அவருக்கு பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது. ஆனால், தொப்புள் கொடியில் இருந்து நச்சுக்கொடியை அகற்றாமல் அவர்கள் இருந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மருத்துவ குழுவினர் நேற்றுமுன்தினம் அவருடைய வீட்டுக்கு சென்று நச்சுக்கொடியை அகற்ற வேண்டும் என்றும், தாய், சேய் நலன் கருதி மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்றும் கூறினர். ஆனால், அதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இயற்கையாக நடந்த சுகப்பிரசவத்தில் தாய், சேய் ஆரோக்கியமாக இருப்பதாக கூறினர்.
நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு சித்த மருத்துவர்களும் வந்து அந்த தம்பதிக்கு ஆலோசனை வழங்கினர். அதன்பிறகு நச்சுக்கொடி அகற்றப்பட்டது.
இந்தநிலையில், பிறந்த குழந்தையின் உடல்நிலையை பரிசோதனை செய்ய வேண்டும் என்பது குறித்து குழந்தையின் பெற்றோருக்கு மருத்துவ குழுவினர் ஆலோசனைகள் வழங்கினர். இதையடுத்து அவர்கள் மருத்துவமனைக்கு வருவதற்கு சம்மதம் தெரிவித்தனர்.
அதன்பேரில் நேற்று காலையில் ஆம்புலன்ஸ் மூலம் மகாலட்சுமியும், அவருடைய குழந்தையும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது அவருடைய கணவர் கண்ணனும் உடன் இருந்தார். மகாலட்சுமி மற்றும் அவருடைய குழந்தையை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர்.
அப்போது பரிசோதனைக்கு உடன்படுவதாகவும், தங்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்க்கக்கூடாது என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதனால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படவில்லை. தொடர்ந்து மருத்துவ குழுவினரின் கண்காணிப்பில் தாயும், குழந்தையும் உள்ளனர். #HomeBirth
குத்தாலம்:
நாகை மாவட்டம் குத்தாலம் அருகே கடலங்குடி கிராமத்தில் துணை ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. கடந்த 3 வருடங்களாக துணை சுகாதார நிலையத்திற்கு மருத்துவர்கள் நியமிக்கப்படாததால் மருத்துவர்களை பணி அமர்த்த வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதனையடுத்து வாரத்தில் 3 நாட்கள் மருத்துவர் வருவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாகியும் இதுவரை மருத்துவர்கள் யாரும் பணி அமர்த்தப்படவில்லை.
இந்நிலையில் இங்கு பணியாற்றிய செவிலியரும் தற்போது வருவதில்லை. கடந்த 3 மாதங்களுக்கு மேலாக துணை சுகாதார நிலையம் பூட்டியே கிடக்கிறது. இதனால் கடலங்குடி, திருவேள்விக்குடி, வாணாதிராஜபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்குத்தான் செல்ல வேண்டியுள்ளது.
கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி போடுவதற்கும், பிரசவித்த தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கும், மகப்பேறு உதவித்தொகை பெறுவதற்கும் குத்தாலத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே மக்கள் நலன் கருதி இங்கு மருத்துவர்களை நியமித்து கடலங்குடி துணை சுகாதார நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் ஜாஷ்பூர் மாவட்டம், பகிச்சா பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கடந்த 20-ம் தேதி பிரசவ வலியுடன் பெண் ஒருவரை அனுமதிக்க உறவினர்கள் கொண்டு சென்றுள்ளனர். அப்போது அவரை சிகிச்சைக்காக அனுமதிக்க ஊழியர்கள் மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால், வேறு வழியின்றி அவர்கள் வந்த ஜீப்பிலேயே அந்த பெண்ணுக்கு அவரது உறவினர்கள் பிரசவம் பார்த்துள்ளனர். குழந்தை பிறந்த பிறகு அந்த பெண்ணையும் குழந்தையையும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள் சிகிச்சைக்காக அந்த ஊழியர்கள் அனுமதித்துள்ளனர்.
ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்களின் இந்த அலட்சியப் போக்கு உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. #chhattisgarh
சீர்காழி:
சீசீர்காழி ஈசானியத்தெருவில் நகர ஆரம்ப சுகாதாரநிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையத்தில் நாள்தோறும் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கும், சிகிச்சைப்பெறவும் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் கடந்த கடந்த 25 நாட்களுக்கு மேலாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாமல் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளும், மருத்துவ பரிசோதனைகளுக்கு வரும் கர்ப்பிணி பெண்களும் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர். இதனால் ஆத்திரமடைந்த நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் மருத்துவர் இல்லாமல் கடந்த 20நாட்களுக்கு மேலாக அலைக்கழிப்பு செய்வதாலும், சுகர் மாத்திரை உள்ளிட்ட தேவையான மாத்திரைகள் கடந்த 6மாதமாக இருப்பு இல்லாததாலும் ஆவேசமடைந்து மருத்துவமனை முன்பு திடீர் முற்றுகையில் ஈடுபட்டனர்.
முற்றுகை போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை பணியிலிருந்த மருத்துவ செவிலியர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்